TNPSC Thervupettagam

சோதனை மாதிரி நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை தீர்வை

April 29 , 2018 2434 days 893 0
  • பெங்களூரு நகரத்தில் போக்குவரத்து மேலாண்மையை (traffic management) அதிகரிப்பதற்காக எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி டவுன்ஷிப் ஆணையத்துடன் (Electronics City Township Authority-ELCITA) கூட்டிணைந்து நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை தீர்வையின் சோதனை மாதிரியை (prototype of intelligent traffic management solution) பெங்களூரு நகரம் சோதனை செய்துள்ளது.
  • பெங்களூரு நகரத்தின் போக்குவரத்து தொடர்பான தகவல்களை நகரத்தின் போக்குவரத்து மேலாண்மை அதிகாரிகளுக்கு வழங்குவதும், பயணிகள் போக்குவரத்தின் மேலாண்மையை அதிகரிக்க உதவுவதும் இந்த தீர்வையின் நோக்கங்களாகும்.
  • இந்த தீர்வையானது பல்வேறு வீடியோ கேமிராக்கள் மூலம் போக்குவரத்து காட்சிகளை காணொளி பதிவு செய்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி அவற்றை செயல்முறைப்படுத்துதல் (processing using artificial intelligence) போன்றவற்றை உள்ளடக்கியது.
  • வாகனங்களை கண்டறிதல், போக்குவரத்து நெரிசல் மதிப்பீடு மற்றும் உண்மை நேர செயல்திறனுக்காக போக்குவரத்து டிராபிக் விளக்குகளை கட்டுப்படுத்துதல் போன்ற போக்குவரத்து மேலாண்மை பணிகளின் தானியங்கலுக்கு (Automation) இந்த தீர்வை உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்