இந்தியக் கடற்படைக்காக வேண்டி கடலுக்கடியில் உள்ள பரப்புகள் குறித்த முக்கியக் கண்காணிப்பிற்காக (UDA) அமெரிக்க கடலடி ஒலியுணர் மிதவைகளை இணைந்து தயாரிப்பதில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பினை மேற் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன.
இது ஆழ்கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிக்க அனுமதிக்கும் ஓர் உயர்நிலைத் தொழில்நுட்பமாகும்.
ஒரு சோனோபூய் என்பது முதன்மையாக கடலடி ஒலியுணர் நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு ஆகிய கடல்சார் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஓர் அதிநவீன சாதனமாகும்.
இது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் மற்றும் கடல்சார் ஆராய்ச்சியில் ஒரு முக்கியக் கருவி ஆகும்.