TNPSC Thervupettagam

சோன்பத்ரா தங்கச் சுரங்கங்கள்

March 3 , 2020 1639 days 632 0
  • உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு தளத்திலிருந்து எடுக்கப்பட இருக்கும் தங்கத்தின் அளவு மதிப்பீட்டை இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (Geographical Survey of India - GSI) வழங்கியுள்ளது.
  • சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய மொத்த தங்கத்தின் அளவு 160 கிலோவாக  இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  • கீழ்க்கண்ட இரண்டு அடிப்படைச் செயல்முறைகளின் மூலம் இந்த மதிப்பீட்டை GSI மேற்கொண்டுள்ளது. அவையாவன:
    • பாறைகள் பற்றிய ஆய்வு மற்றும் தரையில் துளையிடுதல். பாறைகளின் ஆய்வகப் பகுப்பாய்வு ஒரு குறிப்பிட்ட கனிமத்தைக் கொண்டிருப்பதற்கான சாத்தியத்தைக் குறிக்கின்றது.
    • மற்றொரு குறிகாட்டி பாறைகளின் வயது ஆகும். இது ரேடியோ மெட்ரிக் காலக் கணிப்புச் செயல்முறைகளால் தீர்மானிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்