December 20 , 2018
2168 days
735
- மத்திய இந்தோனேஷியாவின் சுலோவேசி தீவில் உள்ள சோபூடன் எரிமலையானது இருமுறை வெடித்து 7.5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் படலங்களை உருவாக்கியுள்ளது.
- இந்தோனேசியாவில் உள்ள சுலோவேசி தீவின் வடக்குப் பகுதியில் சோபூடன் எரிமலை அமைந்துள்ளது.
- இந்தோனேசியாவில் அமைந்துள்ள 129 உயிர்ப்புள்ள எரிமலைகளில் சோபூடன் எரிமலையும் ஒன்றாகும்.
- கெலுட் மற்றும் மேராபி ஆகியவை இந்தோனேசியாவின் மிகவும் தீவிரமான உயிர்ப்புள்ள எரிமலைகள் ஆகும்.
- இந்தோனேசியாவானது பசிபிக்கின் எரிமலை வளைய பகுதியில் அமைந்துள்ளதால் அது நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பால் அடிக்கடி பாதிக்கப்படும் ஒரு பகுதியாகும்.
Post Views:
735