TNPSC Thervupettagam

சோயுஸ் - முதல் மனித விண்கலம்

December 10 , 2018 2049 days 554 0
  • இந்த வருடம் (2018) அக்டோபர் 11 அன்று ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு (Soyuz MS -10), ரஷ்யா, அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு விண்வெளி வீரர்களுடன் சென்ற முதலாவது மனித விண்கலமான சோயுஸ் (Soyuz) வகையைச் சார்ந்த சோயுஸ் MS-11 என்ற விண்கலமானது வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்தது.
  • இந்த விண்கலத்தில் பயணித்த மூன்று விண்வெளி வீரர்கள்
    • ரஷ்யாவின் ஓலெக் கோனோனென்கோ
    • நாசாவின் அன்னி மெக்கலன்
    • கனடா விண்வெளி நிறுவனத்தின் டேவிட் செயின்ட் ஜாக்கஸ் ஆகியோராவர்.
  • இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறரை மாதத்திற்குத் தங்கி இருப்பர்.
  • இது கடந்த (2018) அக்டோபர் மாதத்தில் விண்கல ஏவுதல் தோல்வியடைந்த பின்னர் சோவியத் சகாப்தத்தின் சோயுஸ் விண்கலத்தில் மனிதர்கள் பயணம் செய்யும் முதல் சோயுஸ் விண்கல ஏவுதல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்