TNPSC Thervupettagam

சோலிகா ஈகரிநாட்டா

February 4 , 2023 665 days 342 0
  • அறிவியலாளர்கள் சமூகமானது, கர்நாடகாவின் பிலிகிரி ரங்கன் மலைகளில் வாழும் பழங்குடிச் சமூகமான சோலிகாவின் பெயரினை ஒரு புதிய குளவி இனத்திற்கு இட்டு உள்ளது.
  • இது காடுகளையும் பல்லுயிர்களையும் பாதுகாக்கச் செய்வதற்காக வேண்டி அவர்கள் ஆற்றியப் பங்களிப்புகளுக்கான அங்கீகாரம் ஆகும்.
  • அதே இனத்தின் கூடுதல் மாதிரிகள் நாகாலாந்தின் இரண்டாம் நிலை ஈரநிலக் காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டன.
  • இந்த புதிய குளவி இனமானது டார்வின் குளவிக் குடும்பமான இக்னியூமோனிடேயின் துணைக் குடும்பமான மெட்டோபினியைச் சேர்ந்தது.
  • மெட்டோபினி என்ற துணைக் குடும்பத்தில் உள்ள 27 பேரினங்களில் 862 இனங்கள் உள்ளன.
  • இது இந்தியாவில் கண்டறியப் பட்ட இந்த துணைக் குடும்பத்தினைச் சேர்ந்த இரண்டாவது பேரினம் ஆகும் என்பதோடு இது தென்னிந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்