பிலிகிரி ரங்கணா மலைகள் (BRT) என்ற புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பதில் சோலிகா பழங்குடியினர் சமூகத்தின் பங்கைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.
சோலிகா பழங்குடி இனத்தின் மக்கள் தொகையானது, சுமார் 40,000 ஆகும் என்பதோடு அவர்களில் பலர் கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்டத்தில், குறிப்பாக பிலிகிரி ரங்கணா மலைப் பகுதியில் வாழ்கின்றனர்.
2011 ஆம் ஆண்டில் இந்தப் புலிகள் வளங்காப்பகத்திற்குள் வனம் சார்ந்த நிலம் மீதான உரிமைகளைப் பெற்ற முதல் இனத்தவர் இவர்களே ஆவர்.
இங்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக சுமார் 8-10 புலிகளாக இருந்தப் புலிகளின் எண்ணிக்கை தற்போது சுமார் 50 புலிகளாக அதிகரித்துள்ளது.