TNPSC Thervupettagam

சோலைவனங்கள் – நீலகிரி மார்டென்

February 1 , 2018 2360 days 786 0
  • சமீபத்திய ஆய்வு ஒன்றில், மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள பாம்பாடும் சோலைவன தேசியப் பூங்காவானது அரியவகை விலங்கான நீலகிரி மார்டென் (Nilgiri Marten) விலங்கினத்தின் பாதுகாப்பான இடமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • புனுகுப் பூனைகளை (Civet) போன்று காட்சியளிக்கும் நீலகிரி மார்டெனானது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே (Endemic) வாழக்கூடியவை.
  • உயர்மட்ட இடங்களையே (Higher altitudes) நீலகிரி மார்டின்கள் பெரும்பாலும் வசிக்க தேர்ந்தெடுக்கும்.
  • IUCN-ன் சிவப்பு பட்டியலில் நீலகிரி மார்டெனானது பாதிக்கப்படக்கூடிய விலங்கினமாக (vulnerable) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் 1972-ன் இந்திய வனஉயிர் பாதுகாப்பு சட்டத்தின் பகுதி 2-ன் அட்டவணை இரண்டின் கீழ் (Schedule II, Part 2 of the Indian Wildlife (Protection) Act 1972) நீலகிரி மார்டென் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.
  • பாம்பாடும் சோலைவன தேசியப் பூங்காவானது கேரளாவின் மிகச்சிறிய தேசியப் பூங்காவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்