TNPSC Thervupettagam

சோழர் காலத்து கலைப்பொருட்கள்

June 24 , 2023 393 days 252 0
  • வடக்குப்பட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மன்னர் இராஜ இராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த சோழர் கால நாணயம் உட்பட கிட்டத்தட்ட 400 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே அமைந்துள்ளது.
  • இரண்டாம் கட்ட அகழாய்வின் கண்டுபிடிப்புகளில் கி.பி. 9 மற்றும் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த இரண்டு நாணயங்களும் உள்ளடங்கும்.
  • இந்த நாணயங்களுள் ஒன்று இராஜ இராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
  • ஒரு செப்பு வில், செப்பு மூடி, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்களும் இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்