TNPSC Thervupettagam

சோவியத் விண்வெளி வீரர் வலேரி பாலியகோவ்

September 24 , 2022 667 days 336 0
  • விண்வெளியில் அதிக நேரம் வசித்தவர் என்ற ஒரு சாதனையைப் படைத்த வலேரி பாலியாகோவ் சமீபத்தில் காலமானார்.
  • 1994 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் தேதி முதல் 437 நாட்கள் விண்வெளியில் அவர் தங்கியிருந்தார்.
  • அவர் 1995 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதியன்று பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு 7,000 முறைக்கு மேல் பூமியைச் சுற்றி வந்தார்.
  • முன்னதாக, 1988-89 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணத்தில் பாலியாகோவ் 288 நாட்கள் விண்வெளியில் வசித்திருந்தார்.
  • இவர் 1999 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட SFINCSS-99 என்ற (விண்வெளி நிலையத்திற்கான சர்வதேசக் குழுவினரின் விமானத்தின் மாதிரியினை உருவாக்குதல்) ஒரு பரிசோதனையில் பங்கேற்றார்.
  • 1999 ஆம் ஆண்டில், செர்ஜி அவ்தேயேவ் என்ற விண்வெளி வீரர் 747 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, 678 நாட்கள் விண்வெளியில் வசித்த பாலியகோவின் மிக நீண்ட காலச் சாதனையை முறியடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்