TNPSC Thervupettagam

சௌபாக்யா - திறன் பயிற்சி

March 29 , 2018 2306 days 1081 0
  • சௌபாக்யா திட்டத்தின் (SAUBHAGYA scheme) வேகமான அமல்பாட்டிற்காக ஆறு இந்திய மாநிலங்களில்  மனித வளங்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக மத்திய ஆற்றல் அமைச்சகமானது (Ministry of Power),  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்துடன் (Ministry of Skill Development & Entrepreneurship)  கூட்டிணைந்துள்ளது.
  • இதற்கான ஆறு இந்திய மாநிலங்களாவன
    • அஸ்ஸாம்
    • பீகார்
    • மத்தியப் பிரதேசம்
    • ஜார்கண்ட்
    • ஒடிஸா
    • உத்திரப் பிரதேசம்
  • இந்த கூட்டிணைவின் கீழ்  சௌபாக்கியா திட்டத்தின் கீழான மின்துறை திட்டங்களின் தேவைகளை சந்திக்க 47,000 மின் விநியோகிப்பு லைன்மேன்கள் மற்றும்   8,500  தொழில்நுட்ப உதவியாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.
சௌபாக்யா (பிரதம மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர்கர் யோஜனா)
  • நாட்டின் கடைக்கோடி வரை அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற வீடுகளுக்கும் மின் இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் மின் இணைப்பு சாதனங்களான மின் மாற்றிகள் (transformers), மீட்டர் கருவிகள், மின் கம்பிகள் (Wire) போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படும்.
  • இதன் மூலம் அரசு 2019ல் அனைவருக்கும் 24×7 மின் சேவையை வழங்க இலக்கிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்