சௌபாக்யா திட்டத்தின் (SAUBHAGYA scheme) வேகமான அமல்பாட்டிற்காக ஆறு இந்திய மாநிலங்களில் மனித வளங்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக மத்திய ஆற்றல் அமைச்சகமானது (Ministry of Power), மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்துடன் (Ministry of Skill Development & Entrepreneurship) கூட்டிணைந்துள்ளது.
இதற்கான ஆறு இந்திய மாநிலங்களாவன
அஸ்ஸாம்
பீகார்
மத்தியப் பிரதேசம்
ஜார்கண்ட்
ஒடிஸா
உத்திரப் பிரதேசம்
இந்த கூட்டிணைவின் கீழ் சௌபாக்கியா திட்டத்தின் கீழான மின்துறை திட்டங்களின் தேவைகளை சந்திக்க 47,000 மின் விநியோகிப்பு லைன்மேன்கள் மற்றும் 8,500 தொழில்நுட்ப உதவியாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.
சௌபாக்யா (பிரதம மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர்கர் யோஜனா)
நாட்டின் கடைக்கோடி வரை அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற வீடுகளுக்கும் மின் இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் மின் இணைப்பு சாதனங்களான மின் மாற்றிகள் (transformers), மீட்டர் கருவிகள், மின் கம்பிகள் (Wire) போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படும்.
இதன் மூலம் அரசு 2019ல் அனைவருக்கும் 24×7 மின் சேவையை வழங்க இலக்கிட்டுள்ளது.