TNPSC Thervupettagam
March 1 , 2019 2015 days 573 0
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதியன்று சவுபாக்யா விருதுகள் மத்திய ஆற்றல் துறைக்கான இணையமைச்சர் R.K. சிங் என்பவரால் வழங்கப்பட்டன.
  • சவுபாக்யா திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மின்சார வசதி அளிப்பதை 100 சதவிகித அளவிற்கு சாதித்ததில் நாட்டில் முதல் மாநிலமாக வந்ததற்காக ஜம்மு காஷ்மீர் சவுபாக்யா நிபுணத்துவ விருதை வென்றது.
  • பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா என்பதின் கீழ் சவுபாக்யா விருதுகள், மத்தியப் பிரதேசத்தில் போபாலின் மத்திய மண்டல மின் விநியோக நிறுவனம் மற்றும் இந்தூரின் மேற்கு மண்டல மின் விநியோக நிறுவனம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டன.
பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா
  • மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா என்ற திட்டத்தை ஆரம்பித்தது.
  • இது நாடு முழுவதும் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திற்கும் கடைசிகட்ட மின்வசதி இணைப்பை அளிப்பதன் மூலம் அனைத்து வீடுகளுக்குமான மின் வசதியை சாதிக்க எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்