கஜபதி மாவட்டத்தின் சௌரா பழங்குடியினர் ஒடிசாவில் தங்கள் பூர்வீக நிலங்களின் மீதான வாழ்விட உரிமையைப் பெற்றுள்ளனர்.
எனவே, அதிக எண்ணிக்கையிலான எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களுக்கு (PVTGs) இத்தகைய உரிமைகளை வழங்கும் நாட்டின் ஒரே மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது.
சௌராஸ் பழங்குடியினர் குழுவானது, தங்களின் வாழ்விடத்திற்குள் அமைந்துள்ள இயற்கை கட்டமைப்புகள், புனித தளங்கள் மற்றும் மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கவும் வளங்காக்கவும் அனுமதிக்கும் உரிமைகளைப் பெறுகின்ற மாநிலத்தின் ஐந்தாவது பழங்குடியினக் குழுவாக மாறி உள்ளது.
கஜபதி மாவட்டத்தில் உள்ள சுமார் 128 கிராமங்களில் சௌரா பழங்குடியினர் வசிக்கின்றனர்.
2006 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வன வாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டடத்தின் 3(1) (e) என்ற பிரிவின் கீழ் PVTG குழுக்களுக்கு வாழ்விட உரிமைகள் வழங்கப்படுகின்றன.
மத்தியப் பிரதேச அரசானது, பரியா PVTG குழுவிற்கும், சத்தீஸ்கர் அரசானது கமர் மற்றும் பைகா ஆகிய PVTG குழுக்களுக்கும் வாழ்விட உரிமைகளை வழங்கியுள்ளது.