அருங்காட்சியகப் பார்வையிடல் அனுபவத்தை புரட்சிகரப்படுத்துவதற்காக ஜதன் (Jatan) எனும் மென்பொருளை அதிநவீன கணினி மேம்பாட்டு மையம் (Centre for Development Advanced Computing = C - DAC) கண்டுபிடித்துள்ளது.
இந்த நவீன தொழில்நுட்பமானது ஆன்லைன் அருங்காட்சியகப் பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தொல்பொருட்களை முப்பரிமாண முறையில் (3D) காண உதவும்.
இந்த மென்பொருளானது அருங்காட்சியகங்களில் மெய்நிகர் சுற்றுலாவை (Virtual Tourism) மேற்கொள்ள வழிவகுக்கும்.
மேலும் இம்மையமானது மாற்றுத் திறனாளிகளிடையே அருங்காட்சியகப் பார்வையிடல் அனுபவத்தை அதிகரிப்பதற்காக “தர்ஷக்“ (Darshak) எனும் கைபேசி அடிப்படையிலான செயலி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளது.
இந்த செயலியானது அருங்காட்சியக தொல்பொருட்களுக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. “QR குறியீடுகளை” (Q.R Code) எளிமையாக ஸ்கேன் செய்வதன் மூலம் அத்தொல்பொருட்கள் பற்றிய தகவல்களை அருட்காட்சியகத்தின் உண்மை நேர பார்வையாளர்கள் (Real Time Visitors) அறியவும் உதவும்.
தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளை மேற்கொள்ளும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஓர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமே (Research & Development) C-DAC ஆகும்.