V-Dem நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு ஜனநாயக அறிக்கையின் படி, பல்வேறு கூறுகளுக்கான மதிப்பெண்களில் பதிவான வீழ்ச்சியுடன் இந்தியா இன்னும் தேர்தல் வழி எதேச்சதிகாரம் (சர்வாதிகாரம்) கொண்ட நாடாகவே உள்ளது.
இந்தியா, 2023 ஆம் ஆண்டில் 10 முன்னணி சுய எதேச்சதிகாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்திய நாடானது, மதிப்பாய்வு செய்யப்பட்ட 179 நாடுகளில் கீழ் நிலையில் உள்ள 40-50% நாடுகளுள் ஒன்றாக இருக்கும். தற்போது நைஜர் (சிறந்த) மற்றும் ஐவரி கோஸ்ட் (மோசமான) நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
2.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 35% பேர் வசிக்கும் 42 நாடுகளில் எதேச்சதிகார மயமாக்கல் நடந்து வருகிறது.
உலக மக்கள்தொகையில் 18% பேர் உள்ள இந்தியா, எதேச்சதிகார நாடுகளில் வசிக்கும் மக்கள்தொகையில் பாதியளவினைக் கொண்டுள்ளது.
இந்த அறிக்கையானது, "தெற்கு மற்றும் மத்திய ஆசியா தற்போது உலகின் இரண்டாவது மிகவும் எதேச்சதிகாரம் மிக்க பிராந்தியமாக உள்ளதாக" குறிப்பிட்டுள்ளது.