TNPSC Thervupettagam

ஜனநாயக குறியீட்டுத் தரவரிசை 2019

January 11 , 2019 2147 days 593 0
  • ஐந்து விரிவான பிரிவுகளில் 60 குறியீடுகள் மூலம் 167 நாடுகளைத் தரவரிசைப்படுத்தும் ஜனநாயக குறியீட்டுத் தரவரிசையைப் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு வெளியிட்டு இருக்கின்றது.
  • இந்த தரவரிசை முழுமையான ஜனநாயகம், குறைபாடுள்ள ஜனநாயகம், கலப்பு ஆட்சிமுறை, சர்வாதிகாரம் என ஏதேனும் ஒரு வகையில் ஒவ்வொரு நாட்டையும் வகைப்படுத்துகின்றது.
  • 23/10 என்ற மதிப்பெண்ணுடன் இந்தியாவானது 41வது இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இது குறைபாடுள்ள ஜனநாயகம் என்ற பிரிவில் வைக்கப்பட்டிருக்கின்றது.
  • ஒட்டுமொத்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன மட்டுமே முழுமையான ஜனநாயக நாடுகளாகும்.
  • இந்த ஜனநாயகக் குறியீட்டுத் தரவரிசையின் சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு
    • உலகின் 4.5 சதவிகித மக்கள் மட்டுமே முழுமையான ஜனநாயகத்தில் வசிக்கின்றனர்.
    • முதல் முறையாக மூன்று வருடங்களில் 2018 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உலகின் மதிப்பெண் நிலையாக இருக்கின்றது.
    • 2017 ஆம் ஆண்டில் பெற்ற மதிப்பெண்களை ஒப்பிடும்போது 42 நாடுகள் தங்கள் தரவரிசை மதிப்பெண்களில் சரிவினை சந்தித்திருக்கின்றன. மேலும் 48 நாடுகள் தங்கள் மதிப்பெண்ணை அதிகரித்திருக்கின்றன.
    • இத்தரவரிசையில் அரசியல் பங்கேற்பு என்பது மிகவும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள பிரிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்