ஜனவரி மாதம் முதல், ரூ. 50 கோடி அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூபே கடன் அட்டை மற்றும் யுபிஐ கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்துவதற்கான வசதியை வழங்க வேண்டும்.
இந்தப் புதிய அறிவிப்பின் அடிப்படையில், வணிகக் கழிவு விகித (Merchant Discount Rate - MDR) கட்டணமானது வாடிக்கையாளர்களிடமிருந்தும் வணிகர்களிடமிருந்தும் வசூலிக்கப்பட மாட்டாது.
MDR என்பது தங்களது நிறுவனங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலம் பணம் வசூலித்ததற்காக வங்கியினால் வணிகர்களுக்கு விதிக்கப்படும் ஒரு கட்டணமாகும்.