ஐம்பதாண்டு நிறைவை கொண்டாடும் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஜனாதிபதி வர்ண (Presidential Colour) விருதினை விசாகப்பட்டினத்தில் வழங்கினார்.
ஜனாதிபதி வர்ண விருதானது இராணுவ படைகளுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கவுரவ விருதாகும்.
1967ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பலான INS கல்வாரி கடற்படையில் இணைக்கப்பட்டதிலிருந்து கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு தொடங்க அடித்தளம் அமைக்கப்பட்டது.
இந்திய கடற்படையால், நீர்மூழ்கி கப்பல் பிரிவின் 50-ஆவது நிறைவு ஆண்டான 2017-ஆம் ஆண்டானது “நீரமூழ்கி கப்பல்களுக்கான ஆண்டாக“ (year of submarine) கொண்டாடப்படுகின்றது.