TNPSC Thervupettagam

ஜனாதிபதியின் டிஜிபோடி பயணம்

October 4 , 2017 2463 days 760 0
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அலுவல் ரீதியில் தனது முதல் பயணமாக டிஜிபோடி சென்றார்.
  • ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் உள்ள டிஜிபோட்டிற்குச் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி மற்றும் முதல் இந்திய தலைவர் இவரே ஆவார்.
  • இந்தியாவிற்கென்று டிஜிபோட்டில் தூதரகம் எதுவுமில்லை.
  • ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் உள்ள நாடுகளாவன – சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, டிஜிபோடி.
  • புவியியல் ரீதியாக டிஜிபோடி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்,
    • இது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் சந்திப்பில் உள்ளது.
    • இந்தியப் பெருங்கடல் செங்கடலைச் சந்திக்குமிடத்தில் உள்ளது.
  • சீனா தனது யுக்திவாய்ந்த நிலையை டிஜிபோடியில் பின்வரும் நடவடிக்கைகள் மூலம் அதிகரித்து வருகிறது
    • ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாடு
    • ஒரு பட்டை ஒரு சாலை திட்டம்
    • டிஜிபோடியில் சீனாவின் சமீபத்திய முதல் வெளிநாட்டு ராணுவத் தளம்
    • நிலத்தால் சூழப்பட்ட எத்தியோப்பியாவிற்கும் டிஜிபோட்டிற்கும் இடையே இரயில் இணைப்புத் திட்டம்.
  • கூடுதலாக, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா மற்றும் பிராந்திய சக்திகளான ஐக்கிய அரபு எமீரகம், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகள் தங்கள் இராணுவ செல்வாக்கை டிஜிபோட்டில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்