TNPSC Thervupettagam

ஜன் அவுசாதி திவாஸ் (மரபுசார் மருத்துவ தினம்) - மார்ச் 7

March 8 , 2020 1726 days 632 0
  • மரபுசார் மருந்துகளின் (Generic Medicine) பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • இது 2019 ஆம் ஆண்டு மார்ச் 07 அன்று தொடங்கப் பட்டது.
  • பிரதான் மந்திரி ஜன் அவுசாதி பரியோஜனா (Pradhan Mantri Jan Aushadhi Pariyojana - PMBJP) என்ற திட்டமானது 2015 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று இந்தியப் பிரதமரால் அறிவிக்கப் பட்டது.
  • இது இந்திய அரசின் இரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறையால் தொடங்கப் பட்டுள்ளது.

  • 2020 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 1 PMBJP கேந்திராவை நிறுவ வேண்டும் என்று அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் உயர்தர மருந்துகளின் விலைகளானது சந்தை விலைக்குக் கீழே இருக்கும்படி அரசாங்கத்தால் குறைக்கப் படுகின்றன.
  • 'ஜன் அவுசாதி கடைகள்' அரசாங்கத்தால் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு மரபுசார் மருந்துகள் கிடைக்கின்றன.
  • பிற நிறுவன மருந்துகளை விட மரபுசார் மருந்துகள் மிகவும் குறைந்த விலையில் இங்கு கிடைகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்