இந்தியா முழுவதும் மார்ச் 07 ஆம் தேதி ஜன் அவுசாதி தினமாக அனுசரிக்கப்படும் என்று இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் மன்சூக் மண்டாவியா அறிவித்துள்ளார்.
இது பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசாதி பரியோஜனா (PMBJY - Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana) திட்டத்திற்கு உந்துசக்தி அளிப்பதையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஒரு PMBJY கேந்திரா இருக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.
பொது மக்களுக்காக சுமார் ரூ.1000 கோடியிலான நிதியை சேமிக்கப்படுவதற்கு இந்தத் திட்டம் வழி கோலுகிறது. இந்த மருந்துகள் சந்தை விலையைக் காட்டிலும் 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை குறைவாக விற்கப்படுகின்றன.