இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதையும், பொது மருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP) திட்டம் ஆனது 2008 ஆம் ஆண்டில் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறையால் தொடங்கப்பட்டது.
இது மலிவு விலையில், பொதுப் பெயர் கொண்ட மாற்றுகளை வழங்குவதன் மூலம் விலையுயர்ந்த மருந்துகளின் பிரச்சினையை நிவர்த்தி செய்கிறது.
ஜன் ஔஷதி மருந்துகளின் விலைகள் ஆனது, திறந்தச் சந்தையில் கிடைக்கும் பெரு நிறுவனங்களின் மருந்துகளின் விலைகளை விட 50% முதல் 80% வரை மிக குறைவாக உள்ளன.