TNPSC Thervupettagam

ஜன் சம்பார்க்

September 28 , 2017 2486 days 856 0
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகத்தில் மத்திய தத்தெடுத்தல் வள ஆணையம் [CARA – Central Adoption Resource Agency] “ஜன் சம்பார்க்” எனும் மாதாந்திர தத்தெடுப்பு நடைமுறை எளிதாக்குதல் ( Adaption Facilitation Programme ) திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இது பொதுமக்களின் கவலைகள் மற்றும் தத்தெடுத்தல் தொடர்புடைய விவரங்களைப் பற்றி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே கலந்துரையாடலை உண்டாக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
CARA (Central Adoption Resource Agency)
  • CARA வானது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் சட்டபூர்வ அமைப்பாகும் (Statutory body)
  • ஆதரவற்ற, கைவிடப்பட்ட, ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் தத்தெடுப்பை கண்காணிக்கும் மற்றும் உள்நாட்டு மற்றும் நாடுகளுக்கிடையேயான தத்தெடுப்பை நெறிமுறைப்படுத்துதலை  கட்டாய கடமையாக கொண்ட  ஓர் உயரிய அமைப்பாகும்.
  • இந்தியா 2003-ல் நாடுகளுக்கிடையேயான தத்தெடுத்தலுக்கான ஹேக் ஒப்பந்தத்திற்கு (Hauge Convention On Inter Country Adoption) ஒப்புதல் அளித்துள்ளது,
  • CARA (Central Adoption Resource Agency) இந்தியாவில் இந்த நாடுகளிடையேயான தத்தெடுப்பு கூறுகளை கண்காணிக்கும் மத்திய ஆணையமாக செயல்படுகிறது.
  • CARA அதன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுத்தலை மேற்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்