TNPSC Thervupettagam

ஜன் போஷன் கேந்திரா

August 28 , 2024 90 days 136 0
  • மத்திய அரசானது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 60 நியாய விலைக் கடைகளை ‘ஜன் போஷன் கேந்திரா’ என மறுபெயரிடுவதற்கான சோதனை முறைத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளதால், ரேஷன் கடைகளுக்கு விரைவில் புதிய பெயர் சூட்டப்படும்.
  • குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளானது ரேஷன் வியாபாரிகளின் வருமான அளவை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்குத் தீர்வை வழங்கும்.
  • இந்தக் கடைகள் ஆனது, நுகர்வோருக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வழங்குவதோடு, நியாய விலைக் கடை வியாபாரிகளுக்கு கூடுதல் வருமான மூலத்தினையும் வழங்கும்.
  • அவை 50% பொருட்களை ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் சேமித்து வைப்பதற்கும், மீதமுள்ளவற்றை மற்ற வீட்டுப் பொருட்கள் பிரிவின் கீழ் சேமித்து வைப்பதற்கும் விதிமுறைகள் உள்ளன.
  • மத்திய அரசானது நியாய விலைக் கடைகள் சஹாய் செயலி, மேரா ரேஷன் செயலி 2.0, தர மேலாண்மை அமைப்பு, தர வழிக்காட்டுதல்களுக்கான கையேடு ஆகிய கருவிகள் சிலவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியா முழுவதும் சுமார் 5.38 லட்சம் நியாய விலைக் கடைகள் செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்