மத்திய இரசாயன மற்றும் உரத்துறைக்கான இணையமைச்சர் மன்சுக் எல் மண்டவியா, டெல்லியில் பிரதான் மந்திரி பாரதீய ஜன்அவுசாதி பரியோஜன திட்டத்தின் கீழ் உயிரியல் ரீதியாக மக்கிப் போகக் கூடிய (biodegradable) மாதவிடாய் அட்டைகளான (Sanitary Napkins) ஜன்அவுசாதி சுவிதா (Janaushadhi Suvidha) என்ற பொருட்களை வெளியிட்டுள்ளார்.
இந்த தயாரிப்பு ஆக்சிஜன் இருக்கும் வெளியில் தொடர்புகொள்ளும் போது உயிரியல் ரீதியாக மக்கும் தன்மை கொண்ட வகையில் சிறப்பான கூடுதல் அம்சத்தோடு வெளி வந்துள்ளது.
தேசிய குடும்ப நல அறிக்கை 2015-16ன் படி (National Family Health Survey – 2015/16) 15 வயது முதல் 24 வரையிலான 58 சதவீத பெண்கள் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட அட்டைகள், மாதவிடாய் அட்டைகள் மற்றும் துணிகளை பயன்படுத்துகின்றனர்.
பின்னணி
ஜன்அவுசாதி என்பது 2008ம் வருடம் அனைவருக்கும் மலிவான விலையில் தரமான மருந்துப் பொருட்களை அளிப்பதற்காக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டத் திட்டமாகும்.
இந்த திட்டம் நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஜன்அவுசாதி மருந்து நிலையங்களில் உள்ள சிறப்பு கடைகளின் வழியாக காப்புரிமை இல்லாத மருந்துகளை (Generic Medicines) விற்பதற்கான திட்டம் என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
முதல் ஜன்அவுசாதி மருந்து நிலையம் 2008ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் ஆரம்பிக்கப்பட்டது.