2022-23 ஆம் நிதியாண்டில், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழான அதிகப் பயனாளிகளின் எண்ணிக்கையுடன் பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் முக்கிய நோக்கம் நிதிச் சேவைகளை அனைவரும் சமமான முறையில் அணுகுவதை உறுதி செய்வதாகும்.
அடிப்படை சேமிப்புக் கணக்குகள் கிடைக்கப் பெறுதல், தனிப் பயனாக்கப்பட்ட கடன் அணுகல், தடையற்ற ரீதியில் பணம் அனுப்பும் திறன்கள், காப்பீட்டுத் தொகை மற்றும் குறிப்பாக நலிவடைந்தப் பிரிவினர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் உள்ளிட்ட பின்தங்கியப் பிரிவினருக்கான ஓய்வூதியப் பலன்கள் ஆகியவை இதில் அடங்கும்.