TNPSC Thervupettagam

ஜப்பானின் இளம் வயதில் தங்கப் பதக்கம் வென்றவர்

July 29 , 2021 1088 days 439 0
  • ஜப்பானைச் சேர்ந்த 13 வயதே ஆன ஸ்கேட்போர்டு விளையாட்டு வீரர் மோம்ஜி நிசியா, டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று உள்ளார்.
  • ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வயது விளையாட்டு வீரர்களில் ஒருவராக இவரும் இணைந்துள்ளார்.
  • டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட மகளிருக்கான ஸ்கேட்போர்டு தெருப் போட்டியில் நிசியா தங்கம் வென்றார்.
  • ஜப்பானின் யூட்டோ ஹோரிகோம் ஆடவருக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.
  • இதன் மூலம் இரு பிரிவுகளிலும் தங்கம் வென்ற பெருமை ஜப்பான் நாட்டிற்கு கிடைத்துள்ளது.

குறிப்பு

  • ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வயது விளையாட்டு வீரர் மார்ஜோரீ கெஸ்டிரிங் என்பவராவார்.
  • 1936 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெர்லின் போட்டிகளில் பெண்களுக்கான நீரில் மூழ்கும் (diving) போட்டியில் இவர் வெற்றி பெற்றார்.
  • இப்போட்டியின் போது இவருடைய வயது 13 வருடங்கள் மற்றும் 268 நாட்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்