ஜப்பானின் இளம் வயதில் தங்கப் பதக்கம் வென்றவர்
July 29 , 2021
1216 days
485
- ஜப்பானைச் சேர்ந்த 13 வயதே ஆன ஸ்கேட்போர்டு விளையாட்டு வீரர் மோம்ஜி நிசியா, டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று உள்ளார்.
- ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வயது விளையாட்டு வீரர்களில் ஒருவராக இவரும் இணைந்துள்ளார்.
- டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட மகளிருக்கான ஸ்கேட்போர்டு தெருப் போட்டியில் நிசியா தங்கம் வென்றார்.
- ஜப்பானின் யூட்டோ ஹோரிகோம் ஆடவருக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.
- இதன் மூலம் இரு பிரிவுகளிலும் தங்கம் வென்ற பெருமை ஜப்பான் நாட்டிற்கு கிடைத்துள்ளது.
குறிப்பு
- ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வயது விளையாட்டு வீரர் மார்ஜோரீ கெஸ்டிரிங் என்பவராவார்.
- 1936 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெர்லின் போட்டிகளில் பெண்களுக்கான நீரில் மூழ்கும் (diving) போட்டியில் இவர் வெற்றி பெற்றார்.
- இப்போட்டியின் போது இவருடைய வயது 13 வருடங்கள் மற்றும் 268 நாட்களாகும்.
Post Views:
485