TNPSC Thervupettagam

ஜப்பானின் சாடோ தங்கச் சுரங்கம் - யுனெஸ்கோ அந்தஸ்து

August 2 , 2024 113 days 183 0
  • யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரியக் குழுவானது ஜப்பானின் சர்ச்சைக்குரிய சாடோ தங்கச் சுரங்கத்தினைக் கலாச்சாரப் பாரம்பரியத் தளமாகப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.
  • இதற்காக, இரண்டாம் உலகப் போரின் போது கொரிய நாட்டின் தொழிலாளர்களைத் துஷ்பிரயோகம் செய்த அதன் கொடூரமான வரலாற்றில் ஒன்றாக அதனைச் சேர்க்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது.
  • ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள நைகாட்டா கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ள இந்த சுரங்கம் சுமார் 400 ஆண்டுகள் இயங்கியது.
  • இது 1989 ஆம் ஆண்டில் மூடப்படுவதற்கு முன்னர் உலகின் மிகப்பெரியதொரு தங்க உற்பத்தியாளராக விளங்கியது.
  • 1910-1945 காலக் கட்டத்தில் கொரியத் தீபகற்பத்தில் இருந்த காலனித்துவத்தின் போது ஜப்பானுக்குக் கொண்டு வரப்பட்ட சில கொரியர்கள் இந்தச் சுரங்கத்தில் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப் பட்டதாக சியோல் கூறியுள்ளது.
  • முன்னதாக, மற்றொரு சர்ச்சைக்குரிய ஜப்பானியத் தளத்திற்கு 2015 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது.
  • நாகசாகி மாகாணத்தில் உள்ள குங்கன்ஜிமா அல்லது பேட்டில்சிப் தீவு ஆனது, ஜப்பானின் மெய்ஜி தொழில் புரட்சிக்கு முக்கியமானதாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு முன்னாள் நிலக்கரிச் சுரங்க தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்