TNPSC Thervupettagam

ஜப்பானின் தரையிறக்க ஊர்தி குறுங்கோளில் தரையிறக்கம்

October 1 , 2018 2119 days 620 0
  • ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமானது (JAXA - Japan Aerospace Exploration Agency) 1 கிமீ அளவுடைய குறுங்கோளின் மீது இரண்டு தரையிறக்க ஊர்திகளை (Rovers) தரையிறக்கியதன் மூலம் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது.
  • நகரும் ரோபோக்களின் மூலம் குறுங்கோள்களின் மேற்பரப்பை ஆராய்வது உலகில் இதுவே முதன் முறையாகும்.
  • சிறிய அளவிலான தரையிறக்க ஊர்திகளான MINERVA-II - 1 (குறுங்கோளுக்கான 2-ம் தலைமுறை நுண் நானோ பரிசோதனை ரோபா) ஹயபுசா 2 விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தரை இறங்கியது.
  • MINERVA-II - 1 ஆனது தரையிறக்க ஊர்திகளான 1A மற்றும் 1B ஆகியவற்றை உடையது.
  • இந்த ஹயபுசா II-ன் 2 தரையிறக்க ஊர்திகளும் குறுங்கோள் பரப்பில் தரையிறக்கப்படுவதற்காக குறைந்த ஈர்ப்புத்தன்மையைப் பயன்படுத்தி மேற்பரப்பிற்கு உந்தச் செய்வதன் மூலம் 15 மீட்டர் உயர அளவிற்கு எட்டச் செய்து நிர்வகிக்கப்பட்டது.
  • ஹயபுசா 2 ஆனது ருகு (Ryugu) என்றழைக்கப்படும் குறுங்கோளின் மேற்பரப்பை ஆராய்வதற்காக டிசம்பர் 2014-ல் தொடங்கப்பட்டது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்