TNPSC Thervupettagam

ஜப்பானின் நிலவியல் புவியிடங்காட்டி பிணையம்

October 12 , 2017 2472 days 889 0
  • ஜப்பான் தனது நிலவியல் புவியிடங்காட்டி பிணையத்தின் (Terrestrial Positioning Network System) நான்காவது மற்றும் கடைசி செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA – Japan Aerospace Exploration Agency) மிச்சிபிகி – 4 எனும் இந்த செயற்கைக் கோளை H-II A ராக்கெட்டின் மூலம் ஜப்பானின் காகோஷிமாவில் அமைந்துள்ள தனே காஷிமா தீவின் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தியுள்ளது.
  • Quasi – Zenith என்பது ஜப்பானின் பிராந்திய நிலவியல் புவியிடங்காட்டி பிணையமாகும் (Regional terrestrial positioning network system)
  • இப்பிணைப்பானது 4 செயற்கைக்கோள்களை கொண்டது. இவை பூமியிலிருந்து 30,000 km லிருந்து 39000 km க்கு இடைப்பட்ட உயரத்தில் புவியிணக்கச் சுற்றுப்பாதையில் (Geo Synchronous) நிலைநிறுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.
  • இயற்கை பேரழிவுகளின் காரணமாக வழக்கமான தகவல் தொடர்பு பிணையங்கள் செயலிழக்கும் போது தகவல் தொடர்பை ஏற்படுத்த இந்த செயற்கை கோள்கள் உதவும்.
  • திறன்பேசிகள் மற்றும் வாகன வழிகாட்டு அமைப்பிகளில் GPS தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும், GPS ன் பயன்பாட்டை முழுமைப்படுத்துவதற்கும் உதவும் வகையில் இச்செயற்கைக் கோள்கள் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்