ஜப்பானியர்களின் மக்கள்தொகை முந்தைய ஆண்டில் இருந்த எண்ணிக்கையை விட சுமார் 800,000 குறைந்து, 2022 ஆம் ஆண்டில் 122.4 மில்லியனாகக் குறைந்துள்ளது.
இது மொத்த மக்கள் தொகையில் 0.65% சரிவாகும் என்பதோடு, அந்நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து 14 வது ஆண்டாக வீழ்ச்சியினைக் கண்டு வருகிறது.
ஜப்பானின் மொத்த மக்கள் தொகையானது 125.41 மில்லியனாக இருந்த நிலையில், இது முந்தைய ஆண்டில் இருந்த எண்ணிக்கையை விட அரை மில்லியனுக்கும் மேலாக குறைந்துள்ளது.
ஜப்பானில் பதிவு செய்யப்பட்ட முகவரிகளைக் கொண்டுள்ள வெளிநாட்டவரின் எண்ணிக்கை 10.7% அதிகரித்துள்ளது.
தற்போது ஜப்பானின் மக்கள் தொகையில் சுமார் 2.4% வெளிநாட்டவர் ஆவர்.
ஜப்பானில் கடந்த ஆண்டில் 771,801 என்ற மிகக் குறைவானப் பிறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.