TNPSC Thervupettagam

ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை நெருக்கடி

September 28 , 2023 296 days 208 0
  • அந்நாட்டில் முதன்முறையாக, 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் அல்லது 10 பேரில் ஒருவர் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கடந்துள்ளனர்.
  • 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஜப்பான் தற்போது உலகின் மிக வயதான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.
  • ஒரு வருடத்திற்கு முன்பு, ஜப்பானின் மக்கள் தொகையில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 29 சதவீதமாக இருந்தனர்.
  • 2040 ஆம் ஆண்டில், ஜப்பானிய மக்கள் தொகையில் 34.8 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 70 முதல் 74 வயதுக்குட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஜப்பானில் வேலைவாய்ப்பினைக் கொண்டுள்ளனர்.
  • முதியோர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ள நிலையில்  அந்த நாட்டின் மக்கள்தொகையில் 24.5 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் ஆவார்.
  • மூன்றாம் இடத்தில் உள்ள பின்லாந்து நாட்டின் 23.6 சதவீத மக்கள் இந்த வயது வரம்பில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்