7.6 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஆனது வட-மத்திய ஜப்பானைத் தாக்கியது.
அதன் பிறகு, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் ஆனது இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.
இஷிகாவா பிராந்தியத்தில் உள்ள வாஜிமா நகரின் கடற்கரையை 1 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலான அலைகள் தாக்கியது.
கடந்த வாரம் ஜப்பானின் குரில் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வடகிழக்கு ஜப்பானில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான மாபெரும் நிலநடுக்கத்தால் ஜப்பான் கடுமையாக பாதிக்கப் பட்டது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், ஃபுகுஷிமா கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கிழக்கு ஜப்பானின் பெரிய பகுதிகளை உலுக்கியது.
தலைநகர் டோக்கியோ, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1923 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தினால் சிதைந்தது.