TNPSC Thervupettagam
January 17 , 2019 2023 days 536 0
  • ஜப்பான் பரிசு நிறுவனம் "உயிரியல் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலியல்" துறையில் 2019 ஆம் ஆண்டின் ஜப்பான் பரிசிற்கான நபராக இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவரான பேராசிரியர் டாக்டர் ரத்தன் லால் என்பவரை அறிவித்திருக்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான "மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி" என்ற துறையில் ஜப்பான் பரிசினைப் பெறுபவராக டாக்டர் யோஷியோ ஒகாமோடோ என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • ஒவ்வொரு விருதாளரும் அங்கீகரிப்புச் சான்றிதழையும், நினைவுப் பரிசாக ஒரு தங்கப் பதக்கத்தையும் பெறுவர்.
ஜப்பான் பரிசு பற்றி
  • இந்தப் பரிசு ஒவ்வொரு வருடமும் ஜப்பான் பரிசு நிறுவனத்தால் உலகம் முழுவதும் இருந்து அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் மேம்பாட்டிற்காக குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் மனித இனத்திற்கு செழுமையையும் அமைதியையும் ஏற்படுத்திய அறிவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
  • 1985-ம் ஆண்டு தொடங்கப் பட்டதிலிருந்து இந்நிறுவனம் 13 நாடுகளைச் சேர்ந்த 81 நபர்களுக்கு இவ்விருதினை வழங்கியிருக்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் ஜப்பான் பரிசு "மின்னணுவியல், தகவல் தொடர்பு மற்றும் உயிர் அறிவியல்" ஆகிய துறைகளின் மீது கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்