TNPSC Thervupettagam

ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை

September 14 , 2017 2500 days 825 0
  • ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அரசுமுறைப் பயணமாக இந்திய வந்துள்ளார்.
  • ஜப்பான் கடனுதவியுடன் இந்தியாவில் தொடங்கப்படும் ஆமாதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன்  அடிக்கல் நாட்டினார்.
  • புல்லட் ரயில் திட்டத்துக்கு 10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் சேவைக்கு ஜப்பான் அரசு 88 ஆயிரம் கோடி கடனுதவி அளிக்கிறது.
  • மொத்த வழித்தடத்தில் 92 சதவீத வழித்தடம் உயர்மட்ட மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும். இதில் 7 கி.மீ. தூரம் கடலுக்கு கீழே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு அதன் வழியாக புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது .
  • இந்த புல்லட் ரயில் திட்டம் வரும் 2022-ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆமதாபாத் நகரில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள மும்பை நகரை 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்