TNPSC Thervupettagam

ஜம்மு & காஷ்மீரில் லித்தியம் கனிம இருப்புகள்

February 13 , 2023 523 days 291 0
  • இந்தியாவிலேயே முதன்முறையாக ஜம்மு & காஷ்மீரில் லித்தியம் கனிம இருப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் 5.9 மில்லியன் டன் கனிம இருப்புக்கள் கண்டறியப் பட்டுள்ளன.
  • லித்தியம் என்பது ஓர் இரும்பு அல்லாத உலோகம் மற்றும் மின்சார வாகனங்களின் மின்கலங்களில் உள்ள முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.
  • தற்போது, இந்தியா லித்தியம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற பல கனிமங்களுக்கு இறக்குமதியையே சார்ந்து உள்ளது.
  • லித்தியம் மற்றும் தங்கம் உள்ளிட்ட மொத்தம் 51 கனிமத் தொகுதிகள் பல்வேறு மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
  • இந்த 51 கனிமத் தொகுதிகளில், 5 தொகுதிகள் தங்கம் மற்றும் பிற தொகுதிகள் பொட்டசியம், மாலிப்டினம், மூல உலோகங்கள் போன்றவற்றின் இருப்புகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்