TNPSC Thervupettagam

ஜம்மு & காஷ்மீருக்கான சட்டத் திருத்த மசோதாக்கள்

February 14 , 2024 288 days 346 0
  • 2024 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் ஆணை (திருத்தம்) மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது.
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்தை வழங்குவதன் மூலம் பஹாரி இனக்குழு, பதாரி பழங்குடியினர், கோலி மற்றும் காடா பிராமணர் ஆகியோருக்கு அதிகாரம் அளிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 மற்றும் அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியலிடப்பட்டச் சாதியினர் ஆணை (திருத்தம்) மசோதா, 2024 ஆகியவற்றிற்கும் மேலவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • உள்ளாட்சி அமைப்புகள் மசோதா-2024 ஆனது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் நகராட்சி அமைப்புகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முயல்கிறது.
  • இது அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுடன் சேர்த்து ஒன்றியப் பிரதேசத்தின் உள்ளாட்சிச் சட்டங்களில் நிலைத் தன்மையையும் அறிமுகம் செய்கிறது.
  • தற்போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் நகராட்சி அமைப்புகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எந்த வித விதிமுறையும் இல்லை.
  • பட்டியலிடப்பட்டச் சாதியினர் ஆணை திருத்த மசோதாவானது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பட்டியலிடப்பட்டச் சாதியினர் பட்டியலில் சூரா, பால்மிகி, பாங்கி மற்றும் மேத்தர் சமூகங்களின் இணைச் சொல்லாக வால்மீகி என்ற சமூகத்தினைச் சேர்க்கிறது.
  • 1956 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியலிடப்பட்ட சாதியினர் ஆணையைத் திருத்த இந்த மசோதா முயல்கிறது.

Kathir m February 14, 2024

தற்போது ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்களா ? இல்லையா ?

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்