TNPSC Thervupettagam

ஜம்மு & காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையம்

May 7 , 2022 807 days 568 0
  • ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஆணையமானது, தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையர் K.K.சர்மா ஆகியோரை உத்தியோகப்பூர்வ உறுப்பினர்களாகக் கொண்டது ஆகும்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புவியியல் அம்சங்கள் மற்றும் அணுகல் போன்ற பிற கருத்தாய்வுகளின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப் பட்டது.
  • புதிய சட்டமன்றமானது காஷ்மீரில் 47 இடங்களையும், ஜம்முவில் 43 இடங்களையும் கொண்டு 90 இடங்களைக் கொண்டிருக்கும்.
  • கூடுதலாக ஜம்முவில் ஆறு இடங்களும் காஷ்மீரில் ஒரு இடமும் சேர்க்கப்பட்டு முன்பு 83 ஆக இருந்த எண்ணிக்கையானது தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீரில் முதல் முறையாக, ஒன்பது இடங்கள் பட்டியலினப் பழங்குடி இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பட்டியலினப் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் ஆறு இடங்கள் ஜம்முப் பிராந்தியத்திற்கும், மூன்று இடங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கும் ஒதுக்கப் பட்டுள்ளன.
  • இதில் ஏழு இடங்கள் பட்டியலினச் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • இந்தப் பிராந்தியத்திற்கு ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்