TNPSC Thervupettagam

ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கான மசோதாக்கள்

December 20 , 2023 214 days 163 0
  • புதுச்சேரி மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அரசியலமைப்பு (106வது திருத்தம்) சட்டத்தின் விதிகளை விரிவுபடுத்தச் செய்வதற்கான இரண்டு மசோதாக்களை மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • இது பாராளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% அளவு இட ஒதுக்கீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் சட்டப் பேரவையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான விதிமுறைகள், 1963 ஆம் ஆண்டு ஒன்றியப் பிரதேசங்களின் அரசு சட்டத்தினைத் திருத்தியமைப்பதன் மூலம் பாராளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • ஜம்மு & காஷ்மீரில் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை.
  • மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு தொடரும் என்பதோடு பாராளுமன்றமானது பின்னர் இந்த அமலாக்கக் காலத்தை நீட்டிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்