TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி

June 28 , 2018 2216 days 609 0
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
  • ஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கு பத்தாண்டுகளில் (4 தசாப்தம்) ஆளுநர் ஆட்சி நடைபெறுவது இது எட்டாவது முறையாகும். ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் என்.என்.வோராவின் பணிக்காலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும்.
  • மாநில சட்டமன்றமானது இடைநீக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது பி.பி.வியாஸ் என்பவருடன் சேர்த்து சிறந்த காப் (COP) மற்றும் நக்சல் எதிர்ப்பு வல்லுநரான கே.விஜயகுமார் ஆகியோரை ஆளுநர் என்.என்.வோராவின் ஆலோசகர்களாக நியமித்துள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளராக பி.பி.வியாஸ் இருந்த இடத்திற்கு சத்தீஸ்கர் மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பி.வி.ஆர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்