ஜம்மு காஷ்மீரில் முதல்வர் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப் பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட போது அங்கு மத்திய அரசின் ஆட்சி தொடங்கியது.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இல்லாமல் இருந்தது.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியன்று, அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர், அரசியலமைப்பின் 356வது சரத்தின் கீழ் ஜம்மு & காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்தார்.
தற்போது, புதிய முதலமைச்சருடனான புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு இந்த ரத்து வழி வகுத்துள்ளது.
எனினும் துணை நிலை ஆளுநரானவர் - காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நில மேலாண்மை உள்ளிட்ட முக்கியமானப் பகுதிகள் மீதான நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார்.