TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2019

August 3 , 2019 1815 days 714 0
  • ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2019 ஆனது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதா 2004 ஆம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துகின்றது. இது 2019 ஆம் ஆண்டு மார்ச் 01 அன்று நடைமுறைக்கு வந்த அவசரச் சட்டத்தை மாற்றுகின்றது.
  • இந்த மசோதாவானது சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு மாநில அரசின் சில பதவிகளுக்கான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான இட ஒதுக்கீட்டை நீட்டித்துள்ளது.
  • இதற்கு முன்பு உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமே இடஒதுக்கீட்டுக்குத் தகுதியுடையவர்களாக இருந்தனர்.
  • 2004 ஆம் ஆண்டு சட்டத்தில், உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்ந்து, அவர்கள் 3 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டினால் அவர்கள் இடஒதுக்கீட்டிற்குத் தகுதியற்றவர்களாவர்.
  • மேலும் இந்தத் திருத்தமானது சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கும் விதிமுறையை நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்