TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீர் இணைப்பு தினம் - அக்டோபர் 26

October 31 , 2022 664 days 265 0
  • 1947 ஆம் ஆண்டில் மகாராஜா ஹரி சிங், ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தினத்தை இது நினைவு கூருகிறது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் இணைப்புத் தினமானது, 2020 ஆம் ஆண்டில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாக மாற்றப் பட்டது.
  • முதலில், மகாராஜா ஹரி சிங் தனது மாநிலத்தின் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்து, இரு அண்டை நாடுகளுடனும் நிலைத்தன்மை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
  • இருப்பினும், பதான் பழங்குடியினர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் தாக்குதல்களை எதிர் கொண்ட அவர், இந்தியாவின் உதவியை நாடினார்.
  • இவ்வாறு, மகாராஜா 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்