TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீர் இணைப்பு தினம் - பொது விடுமுறை தினம்

December 31 , 2019 1666 days 947 0
  • ஜம்மு காஷ்மீரின் ஒன்றியப் பிரதேச அரசானது 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26ல் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த தினத்தை 2020 ஆம் ஆண்டிற்கான ஆங்கில ஆண்டின் ஒரு பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் ஆங்கில ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியலானது ஜம்மு காஷ்மீர் அரசின் பொது நிர்வாகத் துறையால் வெளியிடப்பட்டது.
  • இந்த உத்தரவின் படி, ஜூலை 13ம் தேதியன்று அனுசரிக்கப்படும் தியாகிகள் தினத்தன்றும் டிசம்பர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படும் ஷேக் அப்துல்லாவின் பிறந்த தினத்தன்றும் அரசு விடுமுறை அங்கு இருக்காது.
  • 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 தேதியன்று, மகாராஜா ஹரி சிங் அப்போதைய இந்திய ஆளுநர் ஜெனரலான மவுண்ட்பேட்டனுடன் ஒரு இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.
  • இந்த ஒப்பந்தமானது ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை பாதுகாப்பு, வெளி விவகாரங்கள் மற்றும் தகவல்தொடர்பு ஆகிய விவகாரங்களில்  மட்டுமே சட்டங்கள் இயற்றும் அதிகாரத்தை இந்திய நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது.
  • இதைப் பயன்படுத்தி, 370வது பிரிவானது இந்திய அரசியலமைப்பில் இணைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்