ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கடந்த நவம்பர் 21, 2018 அன்று எதிர்பாராத விதமாக மாநில சட்டசபையை கலைத்தார்.
தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் புதிய அரசை அமைப்பதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP – People Democratic Party) தலைவர் மெஹபூபா முப்தி கோரிக்கை விடுத்த ஒரு மணிநேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதற்கு கீழ்க்கண்டவற்றை காரணங்களாக ஆளுநர் கூறியுள்ளார்.
மிகப்பெரிய அளவிலான பண பேரம் மற்றும்
வெவ்வேறு அரசியல் சித்தாத்தங்களை உடைய அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு நிலையான அரசை அமைப்பதில் உள்ள சாத்தியமின்மை.