TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீர் சட்டப்பூர்வ வாழ்விட விதிகள்

April 3 , 2020 1608 days 534 0
  • நாடெங்கிலும் உள்ள மக்கள் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு அரசுப் பணிகளில் நியமனம் பெறும் வகையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பூர்வ வாழ்விட விதிகளை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது.
  • இந்த ஆணையானது ஜம்மு காஷ்மீர் குடிமைப் பணிகள் (அதிகாரப் பரவல் மற்றும் ஆள்சேர்ப்பு) என்பதின் கீழ் வரையறுக்கப்படுகின்றது.
  • இச்சட்டத்தின் படி, சட்டப்பூர்வ வாழ்வகம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சட்டப்பூர்வமாக நிரந்தரமாக வாழும் ஒரு நபரிற்கான இயற்பண்பு அல்லது அங்கீகாரம் என்பதாகும்.
  • இதற்கு முன்பு, பிரிவு 35A ஆனது நீக்கப்பட்ட சிறப்புத் தகுதிநிலையான சரத்து 370 உடன் இணைந்து ஜம்மு காஷ்மீரில் குடியிருப்பவரை வரையறை செய்வதற்கான அதிகாரத்தை அம்மாநிலச் சட்டமன்றத்திற்கு வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்