ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகச் சபையானது, இதரப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீட்டைச் சேர்ப்பதற்காக வேண்டி 1989 ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தினை திருத்தியமைத்தது.
பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதன் மூலம் சட்டத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இடஒதுக்கீடு வழங்குவதற்கான இதரப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களின் வரையறை, உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் முறை, சர்பஞ்ச், நாய்ப் சர்பஞ்ச் மற்றும் பஞ்ச் ஆகியோரை இடைநீக்கம் செய்தல் மற்றும் நீக்குதல் ஆகியவை இந்தத் திருத்தத்தில் அடங்கும்.