TNPSC Thervupettagam

ஜம்மு மற்றும் காஷ்மீர் பேச்சுவார்த்தைகளுக்கான மத்திய அரசின் பிரதிநிதி

October 24 , 2017 2637 days 831 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள நெருக்கடிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும். பிரிவினைவாதிகள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அரசாங்கத்தின் பிரதிநிதியாக தினேஷ்வர் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உளவுத்துறையின் முன்னாள் தலைவர் ஆவார்.
  • அமைச்சரவைச் செயலாளருக்கு நிகரான படிநிலையில் இவர் பணியமர்த்தப் படுகிறார். பிரிவினைவாதிகள் உடனான பேச்சுவார்த்தையில் யார் பங்கு பெறலாம் என்பதை முடிவு செய்யும் உரிமையும் அதிகாரமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இத்தகைய அரசு ரீதியான உரையாடல்கள் காஷ்மீர் அரசு மற்றும் அதிருப்தியாளர்கள் இடையே மத்திய அரசு மீதான நம்பிக்கையை வளர்க்க உதவும்.
  • இதற்குமுன் தினேஷ்வர் ஷர்மா அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற அசாம் மாநிலத்தின் கிளர்ச்சியாளர்கள் குழுக்களுடன் மத்திய அரசின் பிரதிநிதியாக முன் நின்று பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார். 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை உளவுத்துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்